25 Jan 2014

கோட்டைக்கல்லாறு தபாலம் கொள்ளை

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்வாறு அஞ்சல் அலுவலகம் நேற்று (21) இரவு இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வளக்கம் போல் தமது கடமைகள் முடிந்து தபாலக அலுவலகத்தினை மூடிவிட்டு சென்றதாகவும் , தபாலகத்தில் இன்று (22) மக்களுக்கு பொதுசனக் கொடுப்பனவு வழங்குவதற்கான பணம் 50000.00 ரூபா மற்றும் காரியாலய உபகரணங்கள் , தளபாடங்கள் ஏனைய , சொத்துகள் அடங்கலான இருந்தாகவும் கோட்டைக்கல்வாறு அஞ்சல் அலுவல அதிபர் வா.ஜெயந்திரகுமார் தெரிவித்தார்.

இவிடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாகவும் தபாலகத்தின் முன் கதவினை உடைத்து காரிகாயாலய வைப்பு பெட்டகத்தனையும் உடைத்து அதனுள்ளிருந்த 50000.00 பணம் மாத்திரம் களவாடப்பட்டுள்ளதாகவும் வா.ஜெயந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் ( டிசம்பர் -2013, ஜனவரி-2014) மாதங்களில் கிழக்கு மாகாணத்தில் சவகளக்கடை, இறக்காமம், கோட்டைக்கல்லாறு, மஞ்சந்தொடுவாய் , ஆகிய நான்கு தபாலகங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப் பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண் ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் தெரிவித்தார்.  











SHARE

Author: verified_user

0 Comments: