எமது தமிழர்களாகிய இந்துக்கள் ஒரு தனித்துவம் வாய்ந்த கலாசாரத்தினைப் பேணிப் பாதுகாத்து வருகின்றது. ஆனாலும் எம்மவர்களிடத்திலே குறிப்பாக விழாக்கள் மற்றும் விவாகம் மற்றும் வீடுகளில் நடைபெறுகின்ற ஏனைய நிகழ்வுகளிலும் புலால் உணவுகளுக்காக வேண்டி உயிர்க் கொலைகள் இடம்பெற்று தமிழர்களின் கலாசரத்தனையும் சீரழிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
என கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவரும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அலயத்தின் பிரதம குருவுமான கு.சச்சிதானந்தக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 15.01.2014 அன்று களுதாவளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவிதார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரினால் அயராத முயற்சியின் பலனாக இங்கு அமைக்கப் பட்டுள்ள கலாசார மண்டபத்தினுள், இங்கு மதிரமரச் சாலை ஓரம் அமையப் பெற்றுள்ள சுயம்புலிங்கப் பிள்ளையாரையும் , வைத்துக் கொண்டு இந்த கலாசார மண்டபத்தினுள் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு புலால் உணவுகளைக் கொண்டுவரமாட்டார்கள், அவற்றுக்காக வேண்டி உயிர்க் கொலைகள் இடம்பெற களுதாவளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.
களுதாவளையில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் மிகவும் மகா சக்திவாய்ந்தவர், அவரினுடைய சக்தி பாரெல்லாம் பரந்து நிற்கின்றது. அந்த வகையில் பிள்ளையாரை முன்நிறுத்தி இந்த கிராமத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள கலாசார மண்டபத்தில் இக்கிராமத்து மக்கள் தமிழர் கலை கலாசாரத்தினை பேணிப் பாதுகாப்பார்கள் என நினைக்கின்றேன். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment