19 Jan 2014

745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து கின்னஸ் சாதனை

SHARE
நியூசிலாந்து கடற்கரையில் புதிய உலக சாதனை ஏற்படுத்த 745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் வரவிருக்கின்றது.


நியூசிலாந்தில் உள்ள Gisborne என்ற கடற்கரையில் புதிய உலக சாதனை படைக்க ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 745 பேர் நிர்வாணமாக கடலில் நீச்சல் அடித்து சாதனையை ஏற்படுத்தினர். ஆண்கள், பெண்கள் என வயது, பாலினம் வித்தியாசம் இன்றி அனைவரும் நிர்வாணமாக நீச்சலடித்தனர். இந்த காட்சியை உலகின் பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 729 பேர் நிர்வாணமாக நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் பிரிட்டனிலும் இதுபோன்ற ஒரு சாதனை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான குளிர் காரணமாக வெறும் 200 பேர் மட்டுமே நிர்வாணமாக நீச்சலடிக்க வந்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: