(பிரணி)
டெங்கு கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும், தொற்ரா நோய்களுக்கான வைத்திய சேவையும் , வேள்ட் விஷன் லங்கா, பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரனையுடன், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தினால் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான கருத்தரங்கொன்று முனைக்காடு சிறுவர் அபிருத்தி ஒன்றியத்தின் வள நிலையத்தில் நடைபெற்றது. இதில் 35 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் பங்கு பற்றி பயனடைந்தனர்.
இக்கருத்தரங்கில் டெங்கு நுளம்பு, அதன் தாக்கம், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், தொற்றாத நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய்களை அடையாளம் காணும் வழிமுறைகள், பால்நிலை சமத்துவம், குழந்தை பராமரிப்பு, உணவுப் பழக்கவழக்கம் போன்ற விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கு பற்றுனர்கள் அனைவருக்குமான இலவச பரிசோதனையும் வைத்திய சேவையும் இடம் பெற்றது. இதில் இரத்த அழுத்தம், நீரழிவு, உடற் திணிவு சுட்டெண், அயன் போன்றவை பரிசோதிக்கப்பட்டு அவற்றுக்கான அத்தாட்சி அட்டைகளும் துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment