5 Oct 2012

போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டிருப்பு வெல்லாவெளி வீதி புணரமைப்பு பணிகள் ஆரம்பம்.

SHARE


மட்டக்களப்பு மாவட்;டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட பட்டிருப்பு-லெல்லாவெளி வீதிப் புணரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இப்பகுதயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டருந்த இவ்வீதியானது தற்போது புணரமைக்கப் படுவதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத் தக்கதாகுத் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வருடாந்தம் மழை காலங்களில் இவ்வீதி வெள்ளத்தினால் முற்றாக மூழ்கடிக்கப் படுவதாகும். இவ்வீதி புணரமைக்கப் படுவதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் நன்மையடையவுள்ளனர்.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 10 மில்லியன் ருபா செலவில் இவ்வீதி புணரமைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: