17 Oct 2012

உலக இளைஞர் மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வ தெரிவிப்பு

SHARE

2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு இலங்கையில் நடாத்தப்படுவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் ஊடகச் செயாலாளர் நிமல் வீரதுங்க அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகததில் நடைபெற்ற 67 ஆவது மாநாட்டின் போது பான் கீ மூன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் இளைஞர் மாநாடு ஆனது முதல் தடவையாக ஆசிய நாடொன்றில் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகுவதோடு 1976 ஆண்டு காலகட்ட வரலாற்றில் நமது நாட்டில் நடைபெற்ற அணிசேரா மாநாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் மாநாடு போன்ற சர்வதேசரீதியான மாநாடுகள் போன்ற ஒரு மாநாடாக அமையும். அத்துடன் 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இவ் இளைஞர் மாநாடென்பது இலங்கையில் வாழும் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
67 ஆவது மாநாட்டின் போது பான் கீ மூன் அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்துஇ அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் யுத்தத்திற்கும் முன்இ யுத்தத்திற்கு பின்னான காலகட்டங்களிலும் மற்றும் தற்போதைய காலகட்டங்களிலும் இலங்கையில் வாழும் இளைஞர் சமுதாயம் பெற்றுள்ள அபிவிருத்தியை பற்றி தெளிவுபடுத்தினார். அதன் பின் ஐக்கிய நாடுகளின் இளைஞர் திட்டத்தின் (ருNனுநுளுயு) சமூக கொள்கை மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் டனியெலா பாஸ் அவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி துறையில் நமது நாடு பெற்றுள்ள வெற்றிகளையும் மற்றும் எதிர்பார்ப்புக்களையும் அவ் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளையும்இ முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர்களின் பங்குபெறுதலையும் இவ்வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதற்காக அமைக்கப்படும் விதிமுறைகள் பற்றியும் டனியெலா பாஸ் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் தனது கருத்தை வெளியிட்ட டனியல் பாஸ் அவர்கள் இளைஞர் பாராளுமன்றத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் இளைஞர் சமுதாயத்தை பலப்படுத்துவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள திட்டங்களைப் பாராட்டியதோடு 2014 ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டுக்காக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.
என அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டடுள்ளது


SHARE

Author: verified_user

0 Comments: