19 Oct 2012

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயக வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மானிப்பு

SHARE



மட்டக்களப்பு-கிரான்குளம் விநாயக வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்துக்களின் கல்வித் தெய்வமான சரஸ்வதியின் சிலை கிராம மக்களால் நிறுவப்பட்டது.
கிரான்குளம் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆடல், பாடல், கும்மி, கரகாட்டம் போன்றவற்றுடன் சிலை கிராமத்தின் உள் வீதிவழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பின்னர் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் பிரதிஸ்ட்டை செய்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசரியர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், கிராமத்து பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.
தற்போதைய நவராத்திரி காலப்பகுதியில் சரஸ்வதியின் சிலை இப்பாடசாலையில் புதிதாக அமைக்கப்படுவது மேலும் சிறப்பிக்கின்றது என இப்பாடசாலையின் அதிபர் அருணகிரி அவர்கள் தெரிவித்தார






SHARE

Author: verified_user

0 Comments: