இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறப்பு
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசிக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான கே.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் தமிழ்தேசியக் கூட்டடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசிக் கச்சியின் பிரதித் தலைவருமான பொன்.செல்வராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி.இந்திரகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நல்லையா வீதியில் திறந்து வைக்கப்பட்ட இவ்வலுவலகத் திறப்பு விழாவில் மட்டக்களப்பிலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளின் தமிழரவிக் கட்சித் தலைவர்கள் உட்பட கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment