மட்டக்களப்பில் மாணவி ஒருவர் கடத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட களி மடு எனும் கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களி மடு கிராமத்தினைச் சேர்ந்த 18 வயதுடைய மோகனவதனா (வாவா) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப் பட்டுள்ளார் என அம்மாணவியின் தந்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்
கடந்த புதன்கிழமை (17.10.2012) இரவு வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கண்களைக் கட்டி கடத்திச் சென்றுள்ளதாகவும் இதுவரையில் தனது மகள் வீடுதிரும்பவில்லை எனவும் பொலிஸ முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இசசம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.அரியநேந்திரநிடமும் குறித்த மாணவியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரியநேத்திரன் எம்.பி. கடத்தப்பட்ட யுவதியின் தந்தை நேற்று முன்தினம் (18.10.2012) காலை ஏழு மணிக்கு வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது அன்றிரவு ஒன்பது மணிவரை அவரை காத்திருக்க வைத்து விட்டு பொலிஸ் விசாரணை செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்
0 Comments:
Post a Comment