மாமாங்கேஸ்வரருக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம்
ஸ்ரீமத் தட்ஷண கைலாயம் என போற்றப் படுகின்ற இலங்கா புரியில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கிமக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்து மக்களுக்கு அருளாட்சி புரிகின்ற அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 18.10.2012 அன்று ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் அவரைச் சூழ்ந்திருந்த பரிபார மூரத்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடந்த 17.10.2012 அன்று மாமாங்கேஸ்வரர் வழிபாடும் கிரியாரம்பமும் நடைபெற்று அனுக்ஞை, கணபதிஹோமம், நகவ்கிரக ஹோமம், திருவருட்பிரசாதம் வழங்கல் போன்றன இடம்பெற்றன.
அதனைத் தொடரந்து கடந்த 18.10.2012 அன்று யாகபூசைகள் இடம்பெற்று மஹாபூர்ணாகுதி தனாதிகள் என்பன இடம்பெற்று பின்னர் மாமாங்கோஸ்வரருக்கும் ஏனைய பரிபார மூர்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற்றது:
இதன் போது பலநூற்றுக் கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment