30 Sept 2012

மினி சூறாவெளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம்

SHARE


போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீசய மினி சூறாவெளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களும் தங்களது வீட்டுக் கூரைகளுக்குரிய கூரை விரிப்புக்களும் வழங்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சூறாவெளியினால் பல மரங்கள் முறிந்து வீதிகளில் கிடப்பதனால் அவற்றை அப்புறப்படுத்தும் வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப் பட்டுளதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.

இவ்வனர்த்தத்தினால் இப்பகுதி மக்களின் பல பயன்தரும் தென்னை, பனை, பலா, மரவெள்ளி, வாழை, போன்ற பயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: