25 Sept 2012

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் நுளம்பு வலைகள் பகிர்ந்தழிப்பு

SHARE

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால்  கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை கிராம மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.
இந்த பிரதேசத்தில் நுளம்களின் பெருக்கம்; காணப்படுவதனால் இப்பகுதி மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் மேற்படி சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு தொகுதி நுளம்பு வலைகள் இன்று வழங்கப் பட்டதாக சங்கத்தின் மட்டக்களப்பு கிளை, கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை  திட்ட இணைப்பாளர் ஸக்கி, கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுமார், தலைவர் த.வசந்தராஜா, செயலாளர், சா.மதிசுதன்,மற்றும் பொருளாளர் உட்பட பலர் கந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: