மட்டு மாவட்டத்தில் பிரம்புத் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் பல கஷ்டங்களை எதிர் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
வேறு சிறு கைத்தொழில்களுக்கு சம்மந்தப் பட்டவர்கள் பற்பல் உதவிகள் நல்கியுள்ளபோதும் தாம் பல வருடங்களாக குடிசை வீட்டிலிருந்தே எமது ஜீவனோபாயத் தொழிலான பிரம்புத் தொழிலை மேற்கொள்கின்றோம்.
இதன் மூலம் கூடைகள் மற்றும் கைப்பணிப் பொருட்கள் செய்து அதனை மிகக்குறைந்த விலையில் விற்றுத்தான் வாழ்ந்து வருகின்றோம் என பிரம்புத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
எமக்கு தெழிலுக்கு ஊக்குவிப்புக்கள் மற்றும் சந்தைவாய்ப்பு, கடன் வசதிகள், போன்றன இருக்குமாக இருந்தால் நாம் மென்மேலும் முன்நேற்றமடையலாம் என எதிர் பார்க்கின்றோம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு இத்தொழில்களை மேற்கொள்பவர்கள் ஓலைக்குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதையும் குடி நீருக்குத் தட்டுப்பாட்டுடன் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
மாவட்டத்தின் மாவடிவேம்பு மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற பகுதியில் உள்ள மக்கள் பிரம்பினைக் கொண்டு கைப்பணிப் பொருட்கள் செய்து அதனை விற்று வாழ்ந்து வருகின்றமை கண்டுகொள்ளத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment