30 Sept 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை ஆனாலும் அமர்வுக்குச் செல்வோம்.

SHARE


கிழக்கு மாகாண சபைபின் முதலாவது அமர்வு நாளை (01.10.2012) திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும் தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் திருகோணமலை செல்லவுள்ளனர்.

நாளைய அமர்வு தொடர்பாக பேரவைச் செயலாளரினால் சகல உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரை சபை தவிசாளர் மற்றும் பிரதி தெரிவு ஆகியனவே நாளைய அமர்வின் நிகழ்ச்சி நிரல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமை குறித்து விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாணசபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்

“மாகாணசபை உறுப்பனர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய பொலிஸ் பாதுகாப்பு தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள்; கடந்தும் வர்தமானியில் பெயர்கள் பிரகடணம் செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை 
இதன் காரணமான நாங்கள் பொலிஸ் பாதுகாப்பு இன்றியே நாளைய மாகாண சபை அமர்விற்கு செல்லவிருகக்pறோம்.

மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின்னர்கூட தான் உட்பட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய நிலையில் பாதுகாப்பின் நிமித்தம் வேறு இடங்களில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது அப்படியிருந்தும் எமது பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு கவனம் செலுத்துவதாக இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதனாலே இந்த பாகுபாடு என நாம் கருதுகிறோம்.
இதனை எமது கட்சித் தலைவர்கள் பொலிஸ் உயர்மட்டத்தின் கவனத்திற்கு அறிவித்தும் கூட இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றி இதுவரை சாதகமான பதில் முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை” என்றும் பிரசன்னா இந்திரகுமார் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: