19 Sept 2012

நீண்டகால அஞ்ஞாதவாசத்தின் பின் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் குதித்த எனக்கு என்தமிழ் மக்கள்

SHARE
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவானதுஇ தமிழ்த் தேசியம் சர்வதேசத்திற்கு எதைச் சொல்ல விரும்புகின்றதோஇ சர்வதேசம்இ புலம்பெயர் சமூகம் எதைச் சாதிக்க நினைத்ததோ அதே போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திட்டமிடலும் நடவடிக்கைகளும் எவ்வாறு அமைய வேண்டும் உள்ளிட பலவேறு விடயங்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.
என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  போட்டியிட்டு வெற்றியீட்டிய கோவிந்தன் கருணாகரம்(ஜனா) விடுத்துள்ள வாக்களித்த மக்களுக்கான நன்றி கூறலில் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்குகையில் 
நீண்டகால அஞ்ஞாதவாசத்தின் பின் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் குதித்த எனக்கு என்தமிழ் மக்கள் அளித்த பேராதரவிற்கு நன்றிகள். தனிமனித காழ்புணர்வுக்குட்பட்ட விமர்சனங்கள்இ என்மீது ஏவப்பட்ட எதிர்வலைகள் என்ற பல்முனைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் எம் தமிழ் சொந்தங்கள் என் தமிழ் தேசிய பற்றுநிலையை மறக்கவில்லை என்பதற்கு என்னையும் ஒருவனாகத்தெரிவு செய்தமை சான்று மட்டுமல்ல எனக்குப் புல்லரிப்பும் கூட.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடந்த கபட நாடகங்கள்இ அமைச்சர் பட்டாளங்களின் தேர்தல் விதிமுறை மீறல்கள்இ இதைவிட அரசினதும்இ அமைச்சர்களினதும் அடிவருடிகளினதும் அடாவடித்தனங்கள்இ அரச அரச இயந்திரமே கட்சிப் பிரச்சாரத்திற்குட்படுத்தப்பட்ட அவலட்சணம்.

இவ் வரலாற்று வெற்றி தமிழ் தேசியத்துக்கும் தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் முள்ளிவாய்க்கால் வரை உயிர் நீத்த அத்தனை வீரமறவா தமிழனத்துக்கும் நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாகும். அவர்கள் அனைவரது ஒட்டு மொத்த தாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். அத்தோடு இன்றுவரை அரசின் முகாமுக்குள்ளும்இ சிறைக்கூடங்களிலும் தம் வாழ்வைத் தொலைத்த எம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் விடியலைத் தரும் வெற்றியாகும். எனக் குறிப்பிட்டார்

SHARE

Author: verified_user

0 Comments: