22 Sept 2012

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜனனதினம்

SHARE

இந்து மதத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதினத்தினையொட்டி 22.09.2012 இன்று காலை மாபெரும் ஊவலமும் சுவாமி நினைவுப் போருரைக்கூட்டமும் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான திருப்பழுகாமத்திலிருந்து ஒரு பேரணியும் கோவில்போரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரியபோரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலை வந்தது
பின்னர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் வைத்து சுவாமி விவேகாநத்தரின் திவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
இந்து சேவா சங்கத்தின் மட்டக்ளப்பு கிளையினூடாக மேற்கொள்ளப்பட்ட  இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள இந்து ஆலய தர்மகத்தாக்கள், பரிபாலன சபையினர், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பெரியார்கள் கல்விமான்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள், என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஸ்வ பிரமஸ்ரீ வை.இ.காந்தன் குருக்கள், கலைச்சுடர் க.தணிகாசலம்,  முன்னாள் வலயக் கல்விப்பணிப்பளார் மு.பவளகாந்தன், அதிபர் யோகேஸ்வரன், ஆகியோர் சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















SHARE

Author: verified_user

0 Comments: